Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்கள் தொகை கணக்கெடுப்பு : மேட்டுப்பாளையத்தில் துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு : மேட்டுப்பாளையத்தில் துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு : மேட்டுப்பாளையத்தில் துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு : மேட்டுப்பாளையத்தில் துவக்கம்

ADDED : ஜூன் 02, 2010 10:28 PM


Google News

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

566 ஆசிரிய, ஆசிரியைகள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். மேட்டுப்பாளையம் நகரில் "மக்கள் தொகை கணக்கெடுப்பு' பணி துவங்கியது. நகராட்சி கமிஷனர் சுந்தரம் பணியை துவக்கி வைத்தார். முதலில் நகர மன்ற தலைவர் சத்தியவதி வீட்டில் கணக்கெடுக்கப்பட்டது. மேலாளர் காந்திமதி, முதன்மை பயிற்சியாளர் முத்துரத்தினம், ஜெயராமன், மேற்பார்வையாளர் கலாவதி, கணக்கெடுப்பாளர் சக்குபாய், உதவியாளர் சண்முகராஜ் ஆகியோர் கணக்கெடுப்பு பணிகளை மேற் கொண்டனர்.



இது குறித்து நகராட்சி கமிஷனர் சுந்தரம் கூறுகையில், ""மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 33 வார்டுகளிலும் துவங்கின. இதில் 122 கணக்கெடுப்பாளரும், 20 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுகின்றனர்,'' என்றார். மேட்டுப்பாளையம் தாசில்தார் மணிமேகலை கூறுகையில், ""மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை பேரூராட்சிகள், 17 ஊராட்சிகளில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இதில் 364 கணக்கெடுப்பாளர்களும், 60 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுகின்றனர். வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். யார் வீடாவது விடுபட்டிருந்தால், உடனடியாக மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலக போன் எண்ணுக்கு 04254-222153 தெரிவிக்க வேண்டும். முதன்முதலாக தோலம்பாளையத் தில் உள்ள எம்.எல்.ஏ., சின்னராஜ் வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us